2025 ஆசியக் கோப்பை தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியதுடன், நினைவில் நிறைந்த பல சுவாரஸ்ய தருணங்களையும் கொண்டதாக அமைந்தது என்றே கூறலாம்.

இலங்கை அணியின் முன்னணி ஆட்டக்காரரான வனிந்து ஹசரங்கா, தொடக்கத்திலேயே நம்பிக்கையுடன் ஆடத் தொடங்கினார். ஆனால், பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமது வீசிய கூகிளி பந்தை எதிர்பார்க்காமல், ஹசரங்கா கிளீன் போவுல்டாகி வெளியேறினார்.

“>

 

இந்த விக்கெட்டை எடுத்தவுடன், அப்ரார் அதே ஹசரங்காவின் “பேட் ஆஃப்” கொண்டாட்டத்தை மயில் நடனமாகவே ரசிகர்கள் முன்னிலையில் செய்து, சமூக வலைதளங்களில் வைரலானார்.

“>

 

இந்நிகழ்வுகள் ஒருபக்கம் நையாண்டி கலந்த நகைச்சுவையை ஏற்படுத்தினாலும், ஹசரங்கா பின்னர் தனது பந்துவீச்சு மூலம் அதிரடி பதிலடி கொடுத்தார். பாகிஸ்தான் அணியின் ஃபகார் சமான், சைம் அயூப் மற்றும் சல்மான் அலி அகா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்திய ஹசரங்கா, தனது திறமையை மீண்டும் நிரூபித்தார்.