பைக் பந்தயம் என்றாலே அதிரடி, வேகம், சமநிலை, கட்டுப்பாடு என கோடி பேரை ஈருக்கும் மோதல் விளையாட்டு. பெரும்பாலும் பெரியவர்களுக்கு மட்டும் நடத்தப்படும் இப்பந்தயம், தற்போது 6 வயது குழந்தைகள் பங்கேற்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த பைக் பந்தய வீடியோ பார்ப்பவர்களை மெய் மறக்க வைக்கும் வகையில் இருக்கிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Karl Allen-Muncey (@zenmotorcyclemaintenance)

இந்த வீடியோ, இந்தோனேசியாவின் போகோர் நகரத்தில் நடைபெற்ற மினி எலக்ட்ரிக் பைக் பந்தயத்திலிருந்து எடுத்தது. இதில் 6 வயது சிறுவர்கள் வல்லுநர்கள் போலவே வீதிகளில் சுழன்று, திருப்பங்களில் வண்டிகளை சமநிலையுடன் ஓட்டி அசத்தியுள்ளனர். குழந்தைகள் ஓட்டும் பைக்குகள் சிறியதாக இருந்தாலும், அவர்கள் காட்டிய வேகம், கட்டுப்பாடு, திருப்பு முனைகளில் குனிந்து சவாரி செய்த முறை, இவை அனைத்தும் அனுபவம் வாய்ந்த ரைடர்களை நினைவுபடுத்தும் அளவுக்கு இருந்தது. இந்த வயதில் இப்படி ஓட்ட எத்தனை பயிற்சி எடுத்திருப்பார்கள் என பலர் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

இந்த வீடியோவை zenmotorcyclemaintenance என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது. இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. ஒரு பயனர், “இவங்க நடுவுல ஒரு பிரேக் எடுத்து பால் குடிக்க ஆரம்பிச்சா? என்ன கியூட்டான காட்சி!” எனக் கூறியிருக்கிறார். மற்றொருவர், “சிறுவர்கள் பெரியவர்கள் மாதிரி விஷயங்கள் செய்யும்போது பார்க்க சிரிப்பு வராம இருக்காது” என ரசித்துள்ளார்.