உலகின் ஆபத்தான மிருகங்களாக சிங்கமும், புலியும் மட்டுமல்ல, நாகப்பாம்பு போன்ற விஷப்பாம்புகளும் மிகவும் ஆபத்தான விலங்குகளாக கருதப்படுகின்றன. ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோ, இதுவரை நாம் நம்பிய ஒன்றை முற்றிலும் மாற்றியுள்ளது. இதில் கொடிய நாகப்பாம்பு, ஒரு உடும்பனின் முன் முழுமையாக முடக்கப்பட்டு திணறுவதை காண முடிகிறது.
— Wildlife Uncensored (@TheeDarkCircle) September 19, 2025
இந்த 11 விநாடிகளுக்கு உட்பட்ட வீடியோவில், நாகப்பாம்பை அதன் பல்லால் கடித்து பிடித்த உடும்பு, அதனை நிமிர முடியாதபடி கட்டுப்படுத்தி இருக்கிறது. பாம்பு தப்பிக்க பல முறை முயற்சிக்கிறது, கடிக்கவும் முயல்கிறது. ஆனால், உடும்பின் வலுவான பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் அது துடிக்கிறது. பெரும்பாலும் மற்ற விலங்குகள் நாகப்பாம்பை பார்த்தால் பதறிக் கொண்டு விலகுகின்றன. ஆனால் இங்கு, நாகமே உயிர் காக்க போராடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
இந்த அதிர்ச்சி தரும் வீடியோவை @TheeDarkCircle என்ற பயனர் தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுவரை 2.8 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் பெற்றுள்ள இந்த வீடியோவில், பலரும் உடும்பின் தைரியத்தையும் வேட்டையாடும் திறமையையும் பாராட்டி வருகின்றனர். “இத்தனை நாட்களாக பாம்பு தான் பயமுறுத்தும் விலங்குன்னு நினைச்சேன்… இப்போ பாம்பு தான் பயந்துருக்கு!”, “இப்படி ஒரு லிசர்டா!”, “இது என்ன நாகமா… ஒரு உடும்பு வேட்டையாடுற அளவுக்கு!” என பலரும் தங்களது அதிர்ச்சி, ஆச்சர்யம் மற்றும் காமெடியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
