பொதுவாக பெண்கள் கார் அல்லது பைக் ஓட்டும் போது சிறிய தவறு நடந்தாலும் சிலர் அவர்களை “அப்பாவின் ஏஞ்சல்” என கிண்டலடிப்பது வழக்கம். ஆனால் அதே தவறை ஆண்கள் செய்தால்? தற்போது இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோ, இதற்கு பதிலாக ஒரு நக்கலான பார்வையை ஏற்படுத்தியுள்ளது. இதில் இரண்டு இளைஞர்கள் ஸ்கூட்டர் ஓட்டி மோதி வீழும் காட்சி நெட்டிசன்களின் நகைச்சுவையை தூண்டும் வகையில் மாறியுள்ளது.
Bruh😭?
pic.twitter.com/bWwT7OLSYA— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 19, 2025
17 விநாடிகள் நீளமுள்ள இந்த வீடியோவில், இரு இளைஞர்கள் எதிர் திசையிலிருந்து ஸ்கூட்டரில் வந்து இடிக்கிறார்கள். இதில் ஒருவர் கட்டுப்பாட்டை இழந்த ஒருவர் கீழே விழுகிறார். பின்னர் வண்டியை தூக்க முயற்சிக்கும் போது, தவறுதலாக ஆக்சிலேட்டரை கொடுத்து, மீண்டும் அந்த நபரை விட்டு மோதுகிறார். ஆனால் இதோ, இன்னொரு திருப்பம், இரண்டாவது இளைஞரின் ஸ்கூட்டர் தானாகவே வேகமாக ஓடி நேராக குப்பை மேட்டில் மோதி விழுகிறது.
இந்த கலாட்டாவான வீடியோவை @gharkekalesh என்ற பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இதுவரை 4 லட்சம் பார்வைகள் மற்றும் ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ள இந்த வீடியோ, நெட்டிசன்களின் நகைச்சுவை உணர்வை தூண்டியுள்ளது. இதுகுறித்து பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
