அனைவரும் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுகின்ற நிலையில், ஒவ்வொரு நாளும் ஏராளமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாக வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் வெளியாகி, பார்ப்பவர்களை சிரிப்பில் ஆழ்த்திய ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram
“அப்பாவின் மகள்” என்ற தலைப்பில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஒருவர் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வீடியோவில், ஒரு காரை சாலையின் ஓரத்தில் முறையாக நிறுத்தி, தூசி மற்றும் மழையிலிருந்து பாதுகாக்க கவர் போடப்பட்டிருந்தது. ஆனால் அப்போது பின்புறம் இருந்து வேகமாக வந்த ஒரு இருசக்கர வாகன ஓட்டுனர், அந்த கார் மீது மோதினார்.
காரின் மீது வேகமாக மோதியதால் கார் லேசாக முன்னோக்கி நகரத் தொடங்கியது. அதிலும் முக்கியமாக, அந்த பெண் அணிந்திருந்த ஹெல்மெட் அவரது தலையில் இருந்து வழுக்கி கீழே விழுகிறது. இது பார்ப்பவர்களிடையே அதிர்ச்சியையும் சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி, பலரும் இந்தச் சம்பவத்தை கேலி கலந்தும், கவலை கலந்தும் பார்வையிட்டு வருகின்றனர்.
