சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று வைரலாகி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்திக் கொண்டேயிருக்கிறது. குறிப்பாக, நண்பர்கள், உறவினர்கள் இடையே நடைபெறும் நக்கல் நிறைந்த வாட்ஸ்அப் உரையாடல்கள் இணையத்தை கலக்குகின்றன. தற்போது, அப்படி ஒரு நகைச்சுவையான உரையாடல் வைரலாகி, அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. இது ஒரு தாய் மற்றும் மகளுக்கிடையேயான வாட்ஸ்அப் உரையாடல்.
Cooked 😭😭 pic.twitter.com/BEV6BA4FEj
— tbhshii (@tbhshiii) September 1, 2025
@tbhshiii என்ற X பயனர் இந்த உரையாடல் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்திருந்தார். அதில் மகள் தன்னுடைய தாயிடம் பணம் கேட்கிறார்: “அம்மா, pls பணம் குடுங்க… என்னிடம் பணம் இல்லை” என்று மெசேஜ் அனுப்புகிறார். பொதுவாக இந்நிலையில் பல இந்திய அம்மாக்கள் கோபப்படுவது வழக்கம். ஆனால் இங்கு நடந்தது எதிர்பாராத ஒரு திருப்பம். அந்த அம்மா பதிலளிக்க, “இது ஒரு சங்கடமான தருணம்.” என்று பதிலளித்திருக்கிறார். அதாவது, “என்னிடமும் பணம் இல்லை” என்பதை நகைச்சுவையுடன் கூறியுள்ளார். இந்த பதில் பலரையும் சிரிப்பில் ஆழ்த்தியதுடன், இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்த உரையாடலை பார்த்த நெட்டிசன்கள், “இப்போ அம்மாக்களும் Gen Z மாதிரியே பேசறாங்க” என்றும் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள். இந்த பதிவுக்கு இதுவரை 3.7 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன. பலரும், “இந்த மாதிரி நகைச்சுவை அம்சங்கள் தான் சமூக ஊடகங்களை இன்னும் சுவாரஸ்யமாக மாற்றுகிறது” என கூறிகிறார்கள்.
