மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரத்தில் உள்ள ஐடிஐ சிக்னல் பகுதியில், தெருநாய்களை தாக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்தது. குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் இருவர், தெருநாய்கள் மீது வன்முறையாக நடந்து கொண்டதும், ஒரு நாய்க்குட்டியை செருப்பால அடித்தது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இந்த சம்பவம் செப்டம்பர் 18-ம் தேதி அதிகாலை 1:30 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. நாய்களுக்கு உணவு அளித்து வந்த உள்ளூர் பெண் ஒருவர், இந்த கொடூரச் செயல்களை வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram
வீடியோவில், ஒருவன் அமைதியாக ஒரு நாய்க்குட்டி அருகே சென்று, திடீரென செருப்பால் தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது. தாக்குதலால் பயந்தும் வலியாலும் நாய்க்குட்டி கத்திக்கொண்டு ஓடியது.
சம்பவத்தின்போது வீட்டு உள்பகுதியில் இருந்த அந்த பெண், “அவர்கள் ஒன்றும் செய்யாமல் இருந்த நாய்களைத் தாக்கினர். நான் வெளியில் வந்தபோது, என்னை நோக்கியும் கல் வீசினர். நாய்கள் குரைத்ததற்காகவே என்னை தாக்கினர்,” எனக் கூறினார்.
அந்த நபர்கள் நீண்ட நாட்களாக அந்தப் பகுதியில் நீண்ட நேரமாக சுற்றித் திரிந்தார்கள் என்றும், தன்னையும் மிரட்டியுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
அந்த நபர்கள் தாக்கிய பிறகு, அவர்கள் ஓடிவிட்டனர். உடனடியாக, அவர் 112 எண்ணில் அழைத்து காவல்துறையிடம் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த சத்பூர் காவல்துறையினர், சம்பவத்தைப் பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர்.
முதல் முறையாக, காவல்துறை என்னிடம் நேர்மறையாகவும் ஆதரவாகவும் பேசினர். இப்போது அவர்கள் எனக்கு ஆதரவளித்தனர்,” என அவர் கூறினார். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
