ஒடிசா மாநிலம் பாலசோர் நகர காவல் எல்லைக்குட்பட்ட போத்தனா மொஹல்லா பகுதியில், வியாழக்கிழமை மாலை ஒரு கணவன்–மனைவிக்கிடையிலான வாக்குவாதம் கொலை செய்யும் அளவுக்கு முடிந்துள்ளது.

செப்டம்பர் 18-ம் தேதி மாலை 4:30 மணியளவில், குடும்பத் தகராறு வன்முறையாக மாறியதோடு, ஷேக் அம்ஜத் என அடையாளம் காணப்பட்ட நபர், தனது மனைவியுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விரைவில், வாக்குவாதம் கட்டுப்பாடுகளை மீறிய நிலையில்,  அவர் கத்தியால் தன்னுடைய மனைவியின் கழுத்தை அறுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோர சம்பவம் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது, இது சமூக ஊடகங்களில் பரவியதால்,  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவலின்படி, அம்ஜத்தின் மனைவி, குடும்ப தகராறினால் தனியாக ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். தம்பதி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் மீண்டும் கணவன் மனைவி இருவரும் சந்தித்த நிலையில் பெரும் தகராறு ஏற்பட்டது.

இந்த வாக்குவாதத்தின் போது கணவன் கோபம் அடைந்து தன்னுடைய மனைவியை பட்டப்பகலில் கத்தியால் கழுத்தை அறுத்தார், படுகாயமடைந்த அந்தப் பெண், பாலசூர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு (DHH) அனுப்பப்பட்டு, பின்னர் கட்டக் உள்ள SCB மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு (SCBMCH) மாற்றப்பட்டார்.  அந்தப் பெண்ணுக்கு அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது.

இதே நேரத்தில், அந்தப் பகுதி மக்கள் தலையிட்டு, இந்த வன்முறை தாக்குதலைத் தடுக்க முயற்சி செய்ததாகவும், அந்தப் பெண்ணின் கணவன் ஷேக் அம்ஜத்தை கைது செய்து பாலசூர் காவல்துறையிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது. அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.