நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடியில் வனத்துறை சோதனைச் சாவடி அமைந்திருக்கிறது. இங்கு சாலையோரம் தடுப்பு சுவரில் யானைகளின் ஓவியமானது வரையப்பட்டிருந்தது. மேலும் இங்கு வனவிலங்குகள் நடமாடும் என்று எச்சரிக்கும் வகையில் வாசகங்களும் இடம்பெற்று இருந்தது. இந்நிலையில் சோதனைசாவடியின் அருகில் ஒரு காட்டு யானை சாலை பகுதியை கடந்தது.

அப்போது அங்கு வரையப்பட்டு இருந்த ஓவியத்தை பார்த்து யானை மிரண்டு போய் நின்றது. மேலும் அந்த காட்டு யானையானது சுவரில் வரையப்பட்ட ஓவியத்தை தன் துதிக்கையால் தடவி பார்த்தது. இது தொடர்பான வீடியோவை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இவ்வாறு தடுப்பு சுவரில் வரையப்பட்ட ஓவியத்தை பார்த்து யானை மிரண்டு போன சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.