இந்திய ரயில்களின் பொது பெட்டிகள் எப்போதும் பயணிகளின் கூட்டத்தால் நிரம்பி வழியும். கதவு பகுதியில் நிற்பது ஆபத்தானது என்றாலும், கூட்ட நெரிசலால் பலர் வேறு வழியின்றி அங்கேயே பயணிக்கின்றனர். இப்படியான சூழலில், ஒரு பயணிக்கு ரயிலில் இருந்து தள்ளிவிடுவேன் என்று மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் இணையத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ரயில் எண் 12916-இல், பந்திகுய் ஜங்ஷனில் திடீரென ஏறிய ஒரு அந்நியர், மற்றொரு பயணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை மிரட்டியதோடு, ரயிலில் இருந்து தள்ளிவிட முயன்றதாக வீடியோவில் தெரிகிறது. இந்த முழு சம்பவத்தையும் பாதிக்கப்பட்ட பயணி வீடியோவாக பதிவு செய்து, எக்ஸ் கணக்கில் பகிர்ந்தார். இந்த 41 வினாடிகள் வீடியோ, 2.9 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று, வைரலாக பரவியுள்ளது.
travelling Delhi to Sabarmati
train no 12916 unknown person suddenly boarded the train at Bandikui junction, argued with me, threatened to kill me and tried to throw me out of the train.
Please Save Me 😨@IRCTCofficial @RailMinIndia @RailwaySeva @RPF_INDIA @AshwiniVaishnaw pic.twitter.com/ED2GagmF7f— Sarfaraz Zain (@SarfarazZain01) September 16, 2025
வீடியோவில், ஒரு பயணி மற்றவரை தரையில் அமருமாறு கூற, “நீ நின்ற இடத்திலேயே நில்” என்று பதிலளித்தவர், “உள்ளே வா பார்க்கலாம்” என்று மிரட்டுகிறார். இதனால் மோதல் உச்சமடைய, “பேசினால் வெளியே தள்ளிவிடுவேன்” என்று அவர் கோபமாக மிரட்டுவது பதிவாகியுள்ளது.
ஆனால், மிரட்டப்பட்ட பயணி பயப்படாமல், “செய்ய வேண்டியதை செய்” என்று தைரியமாக பதிலளிக்கிறார். இந்தப் பதிவைப் பகிர்ந்த பயணி, “டெல்லியிலிருந்து சபர்மதி செல்லும் ரயிலில், பந்திகுய் ஜங்ஷனில் ஒரு அந்நியர் ஏறி, என்னை மிரட்டி, ரயிலில் இருந்து தள்ள முயன்றார்.
உதவி செய்யுங்கள்” என்று @IRCTCofficial, @RailMinIndia உள்ளிட்டவற்றை டேக் செய்து கோரிக்கை வைத்தார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், “ரயில்களில் இப்படியான மிரட்டல்கள் அதிகரிக்கின்றன” என்று கவலை தெரிவித்தனர். ரயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாலும், புழக்கத்தில் உள்ள காவல், சிசிடிவி கண்காணிப்பு, பயணிகள் புகார்களுக்கு உடனடி பதில் போன்றவை இதைத் தடுக்க உதவும் என்று கருத்துகள் பகிரப்படுகின்றன.
