பாலமலைப்பாங்கான மாநிலங்களான உத்தரகண்ட் உள்ளிட்ட பல பகுதிகள், இயற்கையின் கடும் சீற்றத்தால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. தொடர்ச்சியான கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள், மக்களிடையே கடும் அச்சத்தை உருவாக்கியுள்ளன.
இந்த நிலையில், உத்தரகண்ட் மாநில பாஜக எம்பி அனில் பலுனி, அண்மையில் நிகழ்ந்த ஒரு பெரும் நிலச்சரிவில் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பயணித்த வழியில், அவருக்கு முன்பாகவே ஒரு பெரிய மலைபகுதி முழுமையாக இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, அவர் முன்னோக்கி நகராமல் இருந்ததால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
उत्तराखंड में इस वर्ष आई भीषण अतिवृष्टि और भूस्खलन ने इतने गहरे घाव दिए हैं, जिन्हें भरने में बहुत समय लगेगा।
कल शाम आपदा प्रभावित क्षेत्र में भूस्खलन का एक भयावह दृश्य आप सभी के साथ साझा कर रहा हूं। यह दृश्य स्वयं बता रहा है कि हमारा उत्तराखंड इस समय कितनी भीषण प्राकृतिक आपदा… pic.twitter.com/fdTsXpPsm2
— Anil Baluni (@anil_baluni) September 18, 2025
இந்த பயங்கரமான தருணத்தின் காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார் அனில் பலுனி, அந்த வீடியோவில் மலைச் சிதைவுகள் வேகமாக சாலையில் குவிவது தெளிவாகக் காணப்படுகிறது. சரிவின்போது பல வாகனங்கள் அந்தச் சாலையில் இருந்தன என்றாலும், யாரும் பாதிக்கப்படவில்லை என்பது மகிழ்ச்சியான விஷயமாகும். இருப்பினும், அந்தச் சூழ்நிலை மக்கள் மனதில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவை பகிர்ந்து கொண்ட பாஜக எம்பி,
> “இந்த ஆண்டு உத்தரகண்டில் பதிவான கனமழை மற்றும் தொடர்ச்சியான நிலச்சரிவுகள், மாநிலத்திற்கு ஆழமான காயங்களை ஏற்படுத்தியுள்ளன. அவை குணமடைய நீண்ட காலம் எடுக்கலாம். நேற்று மாலை, பேரிடர் தாக்கிய பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவின் காட்சியை உங்களுடன் பகிர்கிறேன். இது உத்தரகண்ட் தற்போது சந்திக்கும் இயற்கை பேரழிவின் அளவைக் கூறும் ஒரு சாட்சியமாகும்” என்று குறிப்பிட்டார்.
மேலும், “அனைவரின் பாதுகாப்பான வாழ்வுக்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும், செழிப்பிற்காக பாபா கேதார்நாத்தை பிரார்த்திக்கிறேன். இந்த பேரிடர் நேரத்தில் கடினமான சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாமல் சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF), நிர்வாகம் மற்றும் அனைத்து தொழிலாளர்களின் சேவையை மனமார்ந்த பாராட்டுகிறேன்” எனத் தெரிவித்தார்.
