சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இன்று புறநகர் ரயிலில் முதியவர் ஒருவர் ஏற முயன்றார். அப்போது ரயில் புறப்பட தொடங்கியது. இதையடுத்து சென்று கொண்டு இருந்த ரயிலில் முதியவர் எற முயன்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது கால் ரயிலுக்கும், பிளாட்பார்முக்கும் நடுவே மாட்டியது.
#Watch | சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலில் ஏற முயன்ற போது தடுக்கி விழுந்த முதியவரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு பிரிவு காவலர் அஜய் குமார்.#SunNews | #RailwayPolice | #CCTV pic.twitter.com/Qfoh2QdESK
— Sun News (@sunnewstamil) September 18, 2025
இதனை பார்த்த அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு பிரிவு காவலர் அஜய் குமார் துரிதமாக செயல்பட்டு முதியவரை பிளாட்பார்மை நோக்கி இழுத்து அவரது உயிரை காப்பாற்றினார். இது தொடர்பான வீடியோ அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. துரிதமாக செயல்பட்டு முதியவரின் உயிரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு பிரிவு காவலர் அஜய் குமாரை அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.
