திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நிகழ்ந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மல்லகுண்டா கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி குடும்பத்தினர், அருகிலுள்ள டீக்கடையில் இருந்து குழந்தைகளுக்கு சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி வந்தனர். அதில் ஒரு பாக்கெட்டை குழந்தை ஆசையுடன் திறந்த போது, அதற்குள் எலி இறந்து கிடந்தது கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் அந்த சிப்ஸ் பாக்கெட்டின் வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட சிப்ஸ் நிறுவனம் உடனடியாக பதிலளிக்கவும், பொதுமக்கள் முன் மன்னிப்பு கேட்கவும் வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
