தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் தாக்கம் காரணமாக, தமிழகத்தின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் விளைவாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்தின் பல்வேறு இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
குறிப்பாக தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இதேபோன்று வருகிற 19ஆம் தேதி தமிழகத்தின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று தொடரும். கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்கள்: திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம்.
📅 20-09-2025 & 21-09-2025
வட தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்கள் — லேசான மற்றும் மிதமான மழை செய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றும் தொடரும்.
📅 22-09-2025
வட மற்றும் தென் தமிழகங்களில் லேசான மற்றும் மிதமான மழை. புதுச்சேரி, காரைக்காலிலும் மழை வாய்ப்பு தொடரும்.
📅 23-09-2025
தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யலாம்.
மேலும் இன்று சென்னையை பொருத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை: 33°–34°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை: 25°C ஆகவும் இருக்கக்கூடும்.
