வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் கிரீம், டூத்பேஸ்ட், ஆயின்மென்ட் போன்றவை டியூப்களில் இருக்கும். ஆனால், இவை காலியாகும் நேரத்தில் உள்ளே இருக்கும் பொருளை எடுப்பது பெரும் சவாலாக மாறிவிடும். எவ்வளவு அழுத்தினாலும், மடித்து நசுக்கினாலும், டியூபில் சிக்கியிருக்கும் கிரீம் எளிதில் வெளியே வர மறுக்கும்.

இதனால், பலர் டியூபை கத்தரித்து வெட்டி, உள்ளே இருக்கும் பொருளை எடுக்க முயல்கின்றனர். ஆனால், இது அழுக்கு பரவுவதற்கும், பொருள் வீணாகுவதற்கும் வழிவகுக்கும். இந்தப் பிரச்னைக்கு ஒரு அற்புதமான  தீர்வை இன்ஸ்டாகிராமில் @radhikamaroo என்ற பயனர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து, பாராட்டி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Radhika Maroo (@radhikamaroo)

இந்த ட்ரிக்கைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. முதலில், டியூபின் பின்பகுதியை கத்தரியால் லேசாக வெட்டவும். பிறகு, டியூபின் மூடியைத் திறந்து, அதை உருட்டி வெட்டிய பகுதியில் பொருத்தவும். இப்போது மூடியை மெதுவாக உள்ளே அழுத்தினால், டியூபில் சிக்கியிருக்கும் பொருள் முன்பக்கமாக எளிதாக வெளியே வரும்.

வெளியே வந்த பொருளை ஒரு சிறிய கிண்ணத்தில் சேகரித்து, பின்னர் சுத்தமான டப்பாவில் சேமித்து வைக்கலாம். இந்த முறையால், பொருள் வீணாவது தடுக்கப்படுவதோடு, நீண்ட நாட்கள் பயன்படுத்தவும் முடியும். இந்த எளிய, ஆனால் பயனுள்ள முறை உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவதுடன், டியூபின் ஒவ்வொரு துளியையும் முழுமையாகப் பயன்படுத்த உதவும். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் இதை முயற்சித்து, கமென்ட் பகுதியில் புகழ்ந்து தள்ளுகின்றனர்.