ரஷ்யாவில் நடைபெற்ற ரஷ்யா–பெலாரஸ் கூட்டுப் பயிற்சியை ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் ராணுவ உடையில் நேரில் பார்வையிட்டது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

பல்வேறு ராணுவ ஆயுதங்களை நேரில் ஆய்வு செய்த புதினிடம், ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் இந்த கூட்டு ராணுவ பயிற்சியின் முக்கிய அம்சங்களை விளக்கியுள்ளார். ரஷ்யா மற்றும் பெலாரஸை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த பயிற்சி நடத்தப்படுவதாகவும், எதிரிகளின் தாக்குதல்களுக்கு எதிரான ஒத்திகையாகவும் இதனை பார்க்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதில் புதினின் நேரடி பங்கேற்பு, ரஷ்யாவின் ராணுவ நம்பிக்கையை உலகுக்கு வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.