ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் பிரபல சுற்றுலா தலமாக வலம் வரும் பாலிஹர்சந்தி கோயில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலுக்கு மாணவி ஒருவர் தன் காதலனுடன் சென்றுள்ளார். இதையடுத்து காதலர்கள் கோயிலுக்கு அருகில் அமர்ந்திருந்தபோது திடீரென வந்த ஒரு கும்பல் அவர்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். மேலும் அந்த கும்பல் காதலர்களிடம் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். எனினும் காதலர்கள் அவர்களுக்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால் கோபமடைந்த அந்த கும்பல் காதலனை மரத்தில் கட்டி வைத்து துன்புறுத்தினர்.
அதுமட்டுமின்றி கும்பலில் இருந்த 2 பேர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது தொடர்பாக மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 3 குற்றவாளிகளை கைது செய்தனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட மற்றொரு குற்றவாளியை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு காதலனின் கண் முன்னே மாணவியை கூட்டு பாலில் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
