உத்திரபிரதேசம் மாவட்டத்தில் உள்ள ஆக்ரா லட்சுமி நகர் பகுதியில் பகவதி பிரசாத்- ஊர்மிளா தேவி தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் பகவதி பிரசாத் தன்னுடைய மின்சார ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்போது மின்சார ஸ்கூட்டரின் பேட்டரியானது திடீரென்று வெடித்து தீப்பிடித்தது. இதையடுத்து சிறிது நேரத்தில் தீ வீடு முழுவதும் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக வீட்டில் இருந்த பகவதி பிரசாத், ஊர்மிளா தேவி ஆகிய இருவரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
