தமிழ்நாட்டில் சமையல் எல்.பி.ஜி. சிலிண்டர்களுக்கு மத்திய அரசு 5 சதவீதம் வரி விதிக்கிறது, ஆனால் மாநில அரசு மட்டும் 55 சதவீதம் வரி விதிக்கிறது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெளிவுபடுத்தியுள்ளது.

சமையல் எல்.பி.ஜி.வுக்கு ஜிஎஸ்டி வரி கட்டுப்பாட்டில், மத்திய மற்றும் மாநில அரசு தலா 2.5 சதவீதம் என்ற குறைந்த அளவிலான வரி மட்டுமே விதிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், இத்தகைய வதந்திகளை பரப்பாமல் இருந்திட அரசு கேட்டுக்கொண்டுள்ளது.