ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் செந்தில். இவருடைய மகள் கீர்த்தி மீனா கடந்த 4 வருடங்களுக்கு முன் திருப்பூரை சேர்ந்த சிவக்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து உள்ளார். இதையடுத்து தம்பதியினர் இடுவம்பாளையம் சிவசக்தி நகர் பகுதியில் வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று இருக்கிறது.
இதற்கிடையில் சிவகுமாருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை கீர்த்தி மீனா அறிந்தார். இது தொடர்பாக தன் கணவரிடம் கேட்டபோது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிவக்குமார் தன் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை தன் மனைவியிடம் காட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கீர்த்தி மீனா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கீர்த்தி மீனாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கீர்த்தி மீனாவிற்கு திருமணம் முடிந்து சில வருடங்கள் கூட நிறைவடையாததால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
