சமூக வலைதளங்களில் வெளியான ஒரு காணொளி, போலீஸ் அதிகாரி நாயை சுட்டுக் கொன்ற சம்பவத்தைப் பதிவு செய்து, பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இன்ஸ்டாகிராமில் பரவிய இந்த வீடியோவில், ஒரு நபர் தனது நாயை காருக்குள் விட்டு விட்டு வெளியே செல்கிறார். அப்போது, காவல்துறை அதிகாரிகள் அந்த நபரை கைது செய்கின்றனர். காருக்குள் இருந்து இதைப் பார்த்த நாய், பயம் மற்றும் பாதுகாப்பு உணர்வுடன் ஜன்னல் வழியாகக் குதித்து, அதிகாரிகளை நோக்கி ஓடி வருகிறது.

நாய் அதிகாரிகளைப் பார்த்து குறைத்துக் கொண்டிருக்கும்போது, ஒரு கட்டத்தில் அது ஒரு காவலரை கடிக்க முயற்சி செய்கிறது. இதனால் பயந்த அதிகாரி, உடனடியாக துப்பாக்கியை எடுத்து நாயை சுட்டுக் கொல்கிறார். சுடப்பட்ட நாய் துடிதுடித்து இறக்கும் காட்சி காணொளியில் தெளிவாகப் பதிவாகியுள்ளது, இது பார்க்கும் அனைவரையும் கலங்க செய்கிறது.