தமிழ் திரை உலகில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மதராஸி. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி படமாக ஓடி வருகிறது. இந்த படத்தில் வில்லனாக வித்யூட் ஜம்மால் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் அளித்த பேட்டியில், வித்யூட் ஜம்மால் ஒரு மார்ஷல் ஆர்ட் வீரர் என்பதால், சிவகார்த்திகேயன் அவரை அடிப்பது நம்பகத்தன்மையாக இருக்காது எனக் கருதி, அதற்காகவே அவருக்கு சிறப்பு கதாபாத்திர தன்மையை உருவாக்கியதாகக் கூறியுள்ளார்.
