தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் இருப்பவர் பார்த்திபன். இவர் இன்று மாலை 4.46 மணிக்கு அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தக்கூடிய அறிவிப்பு ஒன்று வரப்போகிறது உஷார் என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதன் காரணமாக அரசியல் சம்பந்தமாக ஏதாவது அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் வழக்கம் போல் பார்த்திபன் டிவிஸ்ட் கொடுத்துவிட்டார். அதாவது தன்னுடைய புதுப்பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி நடிகர் பார்த்திபன் தற்போது நான் தான் CM என்ற புதிய படத்தை இயக்கி தயாரிக்கிறார். மேலும் இது தொடர்பாக தன்னுடைய x பக்கத்தில்,

பெரியோர்களே, தாய்மார்களே, வாக்களப் பெருமக்களே! ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன் . என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் CM நாற்காலியில் அமர்ந்தப் பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான்! போடுங்கம்மா ஓட்டு Boat’சின்னத்தைப் பாத்து! இப்படிக்கு, C. M . சிங்காரவேலன் எனும் நான்…. ‘சோத்துக் கட்சி’