மராட்டிய மாநிலம் மும்பை கோரேகான் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், மாநகராட்சி நீர் வழங்கல் துறையில் பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி ஊர்மிளா (44), 18 வயது மகளுடன் வாழ்ந்து வந்தார்.

ஆனால், ஊர்மிளா அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளைஞருடன் கள்ளத் தொடர்பில் ஈடுபட்டு, அடிக்கடி அவருடன் செல்போனில் பேசுவதாகவும், கணவர் இல்லாத நேரங்களில் அவரை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு அடுத்த கட்டமாக, வீட்டிற்கு அடிக்கடி வந்த மகளின் காதலனுடனும் ஊர்மிளாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளத் தொடர்பாக மாறி, மகள் இல்லாத நேரங்களில் அவருடனும் நேரம் செலவிட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

மகளின் காதலனுடனும், மற்றொரு இளைஞருடனும் தொடர்பு வைத்திருந்த ஊர்மிளா, தனது கள்ளக்காதலருடன் சேர்ந்து வாழ்வதற்காக, வீட்டில் இருந்த நகைகளை விற்று ரூ.10 லட்சத்தை காதலனின் வங்கி கணக்கில் மாற்றியிருந்தார். மேலும், சில நகைகளை மகளின் காதலனுக்கும் கொடுத்துள்ளார்.

இதனால் கணவரிடம் மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில், ஊர்மிளா தனது அப்பாவி கணவர் ரமேஷ் மீது திருட்டு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அவர் நேரடியாக போலீஸ் நிலையத்துக்குச் சென்று, “வீட்டில் இருந்த நகைகளை என் கணவரே திருடிவிட்டார்” என்று புகார் அளித்தார்.

போலீசார் உடனடியாக வீடு வந்து ஆய்வு செய்தபோதும், திருட்டு சம்பவத்திற்கான எந்தவித சான்றுகளும் கிடைக்கவில்லை. சந்தேகப்பட்ட போலீசார், தம்பதியின் செல்போன்களை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, ஊர்மிளா வேறு ஆண்களுடன் தொடர்பில் இருந்ததும், மகளின் காதலனுடனும் அடிக்கடி பேசியதும் வெளிச்சத்துக்கு வந்தது.

பின்னர் ஊர்மிளாவிடம் போலீசார் கடுமையாக விசாரிக்க, உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. கள்ளத் தொடர்பை மறைக்கவும், நகை பணத்தை காதலர்களுக்கு கொடுத்ததையும் மறைக்கவும், தனது கணவர்மீது தவறான புகார் கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் ஊர்மிளாவையும், அவருடைய மகளின் காதலனையும் கைது செய்துள்ளனர். மேலும், மற்றொரு காதலரைப் பற்றியும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் மும்பை கோரேகான் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.