நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெறிநாய் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரி நகரில் இன்று அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. நகரின் நடைபாதையில் சிறுமி ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அங்கிருந்த தெருநாய் திடீரென பாய்ந்து கடித்து குதறியது.
இதனால் சிறுமி ரத்த காயமடைந்தார். அங்கு இருந்த பொதுமக்கள் உடனடியாக நாயை விரட்டி சிறுமியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் சிறுமிக்கு தேவையான சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெருநாய் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
#WATCH | A shocking street dog attack has left Puducherry shaken. A young girl was mauled by a street dog on September 12 while she was walking on the sidewalk at a busy area in Puducherry. Local people rushed to her aid, but concerns remain over growing stray dog attack… pic.twitter.com/XvWSsGFaj1
— The Federal (@TheFederal_News) September 12, 2025
“>
மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன என்றாலும், இன்னும் பல இடங்களில் பிரச்சனை நீடிப்பதால், “குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக உடனடி தீர்வுகளை அரசு கொண்டுவர வேண்டும்” என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
