சமூக வலைதளங்களில் ஒரு திகிலூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. இதில் ஒரு நபர் மிகப்பெரிய முதலையை துணிச்சலுடன் பிடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ வெறும் பரபரப்பு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் முதலை போன்ற ஆபத்தான விலங்குகளுக்கும் இடையேயான உறவு எவ்வளவு சவாலானது என்பதையும் காட்டுகிறது.
முதலைகள் இன்றைய காலத்தின் டைனோசர்கள் என்று அழைக்கப்படுகின்றன. சினிமாவில் டைனோசர்கள் எப்படி எதையும் விழுங்கிவிடும் அளவுக்கு ஆபத்தானவையோ, அதேபோல முதலைகளும் வாய்ப்பு கிடைத்தால் மனிதர்களையும் தாக்கக்கூடியவை.
வீடியோவில், முதலையை பிடிக்க ஒரு நபர் தைரியமாக படகிலிருந்து இறங்குகிறார். முதலை அவரை பார்த்தவுடன் தப்பிக்க முயல்கிறது. ஆனால், அந்த நபர் பயமின்றி புதர்களுக்கு இடையே சென்று முதலையை பிடித்துவிடுகிறார். முதலையின் கழுத்தை இறுக்கமாக பிடித்து, அதன் பலமான தாடையால் தனக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறார்.
View this post on Instagram
பிடித்த பிறகு அவர் மகிழ்ச்சியில் துள்ளுவது பார்க்க சினிமா காட்சி போல இருக்கிறது. இந்த அதிரடி வீடியோவை இன்ஸ்டாகிராமில் therealtarzann என்ற ஐடி மூலம் பகிரப்பட்டு, 48 லட்சம் பார்வைகளையும், 2 லட்சத்திற்கு மேல் லைக்குகளையும் பெற்றுள்ளது.
பயமுறுத்தும் இந்த காட்சியை பார்த்த ஒருவர், “இது உண்மையிலேயே டைனோசரின் சகோதரன் போல இருக்கிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார், மற்றொருவர், “இப்படி துணிச்சல் எல்லோருக்கும் வராது, இவருக்கு சல்யூட்” என்று பாராட்டியுள்ளார். இருப்பினும், சிலர் இப்படி ஆபத்தான விலங்குகளை நெருங்குவது உயிருக்கு கேடு விளைவிக்கும் என்று கவலை தெரிவித்தனர்.
