தினசரி பயன்படுத்தும் எஃகு மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களில் சில நேரத்துக்குப் பிறகு துர்நாற்றம் ஏற்படுவது பொதுவான பிரச்சனை.

குறிப்பாக பால், தேநீர், காபி போன்ற திரவங்களை வைத்த பிறகு அந்த வாசனை நீங்காமல் இருப்பது  பெரிதும் தொந்தரவு செய்கிறது. இந்த சூழலில், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது. இதில், ஒரு பெண் எளிமையான முறையில் எஃகு பாட்டிலில் உள்ள நாற்றத்தை அகற்றும் ‘ஐடியா  ஒன்றை விளக்கியுள்ளார்.

அதன்படி, பாட்டிலின் வாசனையை அகற்ற, ஒரு பிரியாணி இலையை எரித்து, அதனை பாட்டிலுக்குள் வைத்து, மூடியை இறுக்கமாக மூட வேண்டும். சில நிமிடங்களில் அந்தப் புகை பாட்டிலுக்குள் உள்ள நாற்றத்தையும் ஈரப்பதத்தையும் உறிஞ்சிவிடும்.

 

View this post on Instagram

 

A post shared by DiDi ki Recipe (@pari.gound.31)

“>

இதன் பிறகு சோப்புடன் கழுவும் போது பாட்டில் புதியதாக மாறும் என அவர் தெரிவிக்கிறார். இந்த ஹேக் எஃகு பாட்டில்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பிளாஸ்டிக் பாட்டிலில் பயன்படுத்தவே கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த வீடியோவை இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் பெற்றுள்ள இந்த ஹேக்கிற்கு, “அற்புதமான யோசனை!”, “பயனுள்ள தகவல்” என பலரும் பாராட்டும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். மக்கள் சுலபமாக முயற்சி செய்யக்கூடிய, பாதுகாப்பான முயற்சி  என்பதால் இது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.