ஐந்தறிவு படைத்த விலங்குகளின் மனதை தொடும் உணர்வுகளை வெளிப்படுத்தும் தருணங்களை நாம் சில சமயங்களில் காண நேரிடும். இதுகுறித்த ஓர் உணர்ச்சி மிக்க வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், ஒரு யானை தனது உரிமையாளரிடம் காட்டும்  பாசமும், உறுதியான விசுவாசமும் அனைவரையும் கண்கலங்கச் செய்துள்ளது.

இந்த வீடியோவில், ஒரு யானை தனது உரிமையாளருடன் காட்டின் வழியாக நடந்து செல்கிறது. அப்போது திடீரென, உரிமையாளர் தரையில் விழுவது போல நடித்தார். இது யானைக்கு சற்றும் ஒரு “நாடகமாக” தோன்றவில்லை.

யானை அந்த நேரத்தில் அச்சத்துடன் தும்பிக்கையை உயர்த்தி, உரிமையாளரை எழ செய்ய  முயன்றது. அதைவிட முக்கியமாக, அதன் கனமான கால்கள் உரிமையாளரின் மீது எடுபடாமல் மெதுவாக நடந்து, மிகுந்த கவனத்துடன் தும்பிக்கையின் உதவியால் அவரை தூக்க முயற்சிக்கும் காட்சி சமூக வலைதள பயனர்களின் இதயங்களை உருக்கிவிட்டது.

 

 

View this post on Instagram

 

A post shared by Subhash Dixit (@s_d_entertainments)

இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் தளத்தில் @s_d_entertainments என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதுவரை 5 லட்சம் பார்வைகள் மற்றும் 33,000 லைக்குகள் பெற்றுள்ள இந்த வீடியோ, “யானையின் உணர்வுகளும் நம்மை போலத்தான்!” என்ற புதிய உரையாடலுக்கு வழிவகுத்துள்ளது.

இந்த வீடியோவை பார்த்த மக்கள், “இது உண்மையான பாசம். மனிதர்களுக்கே இல்லாத விசுவாசம் இந்த யானைக்குள் இருக்கிறது.” “உணர்வுகள் உள்ள உயிரினங்கள் நாம் காப்பாற்ற வேண்டியவை.”“இந்தக் காட்சியைப் பார்த்தவுடன் கண்கள் கலங்கின.” என கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.