ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள வீடியோ,  திரைப்படங்களில் காணும் காதல் காட்சியை போன்று ஒரு காதலன் தன் காதலியுடன் திருமண மண்டபத்திலிருந்து ஓடிச் செல்லும் தருணம் நெட்டிசன்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ஒரு இளைஞர் திருமண மண்டபத்திற்குள் நுழைகிறார். அங்கு, மற்றொருவருடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில் தனது காதலியை நேரில் சந்திக்கிறார். யாரையும் பொருட்படுத்தாமல், நேராக சென்று அவளின் நெற்றி மீது சிந்தூரம்  வைத்து, அவளுடன் சேர்ந்து அங்கிருந்து ஓடிச் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

 

பெண்ணும் கண்கலங்கிய நிலையில், வாலிபரை  கட்டிப்பிடித்து, அழுகையுடன் நடந்து செல்லும் காட்சி, இடம்பெறுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடக தளமான @flix.indian என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. அந்த  வீடியோவில், “இது ஒரு திரைப்படக் காட்சி அல்ல, உண்மையான காதலின் வெளிப்பாடு” என கூறப்பட்டுள்ளது.

இதுவரை மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகள் மற்றும் 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் பெற்றுள்ள இந்த வீடியோ, தொடர்ந்து பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும், “இதுவே உண்மையான காதல்!” “திரையுலகத்தை மிஞ்சும் காட்சி!” “முடிவை எடுப்பதில் தைரியம் தேவை. இந்த ஜோடிக்கு வாழ்த்துகள்!” எனகருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் அதே நேரத்தில், “திருமணம்  நடைபெறும் மண்டபத்தில் இந்த மாதிரியான நடவடிக்கைகள் சமூக ரீதியாக தவறானது”, “இந்த விஷயங்களை ரீலாகக் கொண்டாடுவது பிரச்சனையை உருவாக்கும்”
என எதிர்மறையான விமர்சனங்களும் வெளிப்பட்டுள்ளன.