காட்டின் உலகம் என்பது வாழ்க்கைக்கும், மரணத்திற்கும் இடையிலான தினசரி போராட்டம் நடைபெறும் பரபரப்பான தளமாகும். இந்த இயற்கை யுத்தத்தில் சிறிய விலங்குகள் பெரிய மற்றும் ஆபத்தான விலங்குகளுக்கு எளிதில் இரையாகின்றன. ஆனால் சில சமயங்களில், மிகப்பெரிய ஆபத்தான விலங்குகளும் தங்கள் பிடியிலுள்ள மற்ற விலங்குகளிடம் எதிர்மறை எதிர்வினைகளை சந்திக்க நேரிடும்.
அதற்கான சான்றாக, சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்வையாளர்களிடம் திகைப்பு, சிரப்பு மற்றும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், ஒரு ஆபத்தான முதலை மற்றும் பெரிய நீர்யானை நேருக்கு நேர் மோதும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
Everyone recognizes a psycho when they see one pic.twitter.com/ZQY1gcYhHo
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) September 9, 2025
அந்த வீடியோவில், ஒரு ஆற்றங்கரையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த முதலை ஒன்றின் அருகே திடீரென ஒரு நீர்யானை தண்ணீரிலிருந்து எழுந்து வருகிறது. முதலை, தனது பெரிய தாடையை விரித்தபடி, அச்சுறுத்தும் வகையில் செயல்படத் தொடங்குகிறது. ஆனால் அதற்கெதிராக, நீர்யானையும் தன்னை அச்சுறுத்த வந்த முதலைக்கு பெரிய வாயைத் திறந்து தன் பலத்தையும், துணிவையும் காட்டுகிறது. இந்த எதிர்பாராத தைரியமான சவாலை எதிர்கொண்ட முதலை, சில வினாடிகளில் திடீரென்று பயந்து பின்வாங்கியது.
இந்த வீடியோ @AMAZlNGNATURE என்ற ஐடியின் மூலம் (X) பகிரப்பட்டுள்ளது. வீடியோ வெறும் 13 வினாடிகள் மட்டுமே இருந்தாலும், இது தற்போது வரை 3.5 மில்லியன் முறை பார்வையுடன், 24,000க்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் நூற்றுக்கணக்கான கமெண்டுகள் பெற்றுள்ளது. மேலும் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
