அதிமுகவின் முன்னாள் மூத்த தலைவர் செங்கோட்டையன், சமீபத்தில் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டு, அதிமுக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தினார்.
இதனையடுத்து, அவர் நேரடியாக டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவை சந்தித்ததோடு, அரசியல் நிலைப்பாட்டில் மாற்றத்தை நோக்கிச் செல்லும் சிக்னலாகவே இது கருதப்படுகிறது. இந்த சந்திப்பு, தமிழ்நாடு அரசியலில் புதிய இணைப்புகளை உருவாக்கும் வகையில் இருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில், இன்று (செப்.11) பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரனும் டெல்லியில் அமித் ஷாவை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது, சமீபத்தில் நடைபெற்ற செங்கோட்டையன்–அமித் ஷா சந்திப்பு குறித்து ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பின்னணியில், நயினார் திரும்பிய பின்பு, செங்கோட்டையன் பாஜகவில் இணைவது தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் எனக் கட்சி வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், தமிழக அரசியலில் புது சரிவுகளுக்கு வாயிலாகும் நிலை உருவாகியுள்ளது.
