உத்தரபிரதேசம் மாநிலம் அலிகரில் தெருவோர உணவுப் பொருட்கள் வாங்கும் போது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்கான ஓர் அதிர்ச்சிகரமான சம்பவம் பதிவாகியுள்ளது. அதாவது ஒரு தெருவியாபாரியிடம் வாங்கிய சப்ஜியில் இறந்த பல்லி ஒன்று இருப்பதைக் கண்ட வாடிக்கையாளர், அதை சமூக ஊடகங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவும் வீடியோவில், பாதிக்கப்பட்ட நபர் கச்சோரியுடன் பரிமாறப்பட்ட சப்ஜி ஒன்றை வாங்கிய பிறகு, அதில் இறந்த பல்லி இருப்பதை கண்டுபிடிக்கிறார். அதனை அப்படியே விற்பனையாளரிடம் காண்பித்து, கடும் பதட்டத்துடன் எதிர்கொள்கிறார்.
@aligarhpolice कचोरी खाने के दौरान सब्जी में निकली छिपकली, अलीगढ के अतरौली अनाज मंडी के सामने कचोडी खाने गया था युवक ,सब्जी में छिपकली देखकर युवक के उडे होश,वीडियो सोशल मीडिया पर वायरल है ।
@foodsafetygo @Dm_Aligarh pic.twitter.com/R9YYgHfNJW
— अतरौली खबर (@atraulikhaber) September 10, 2025
விற்பனையாளர், தன்னை (தயவுசெய்து மன்னிக்கவும், தவறாக நடந்தது) என்று கூறி மன்னிப்பு கேட்கிறார். மேலும், வாடிக்கையாளரின் கால்களைத் தொடவும் முயற்சிக்கிறார். இந்தக் காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
இந்த பிரச்சினையை பார்த்ததும் அங்கு கூடிய பொதுமக்கள், விற்பனையாளிடம் அவருடைய பெயர் மற்றும் மற்ற விவரங்கள் குறித்து கேள்வி எழுப்ப, நிலைமை மேலும் பரபரப்பாக மாறியது. வீடியோவில் ஒரு நபர், “நீங்க எங்கிருந்து வர்றீங்க? உங்க பேரு என்ன?” எனக் கேட்டதும் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியதை அடுத்து, அலிகர் காவல்துறை பதிலளித்து, இதுவரை சம்பந்தப்பட்ட உள்ளூர் காவல் நிலையத்தில் எந்தவொரு புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், அதிகாரப்பூர்வமான விளக்கத்தில், “உணவுப் பாதுகாப்புத் துறையுடன் ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க, உள்ளூர் காவல்துறைக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன,” எனக் கூறியுள்ளது.
