டெல்லி காவல்துறை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் ஐந்து பயங்கரவாதிகளை கைது செய்துள்ளது. IED தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட சில பாகங்களையும் போலீசார் மீட்டுள்ளனர்.வெல்வேறு  மாநிலங்களைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“>

 

இதில், 2 பேர் டெல்லியில், 1 பேர் மத்யபிரதேசத்தில், 1 பேர் ஹைதராபாதில் மற்றும் 1 பேர் ராஞ்சியில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சதிகூட்டமாக IED வெடிகுண்டுகளை உருவாக்க திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், வெடிகுண்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் முக்கிய பாகங்கள் சிலவற்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன