திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின், கடந்த மாதம்  கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியடைய வைத்தது. இந்த கொலை வழக்கில், கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரன் சுர்ஜித், அவரது தந்தை உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் உறவினர் ஜெயபாலன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மூவருக்கும் வழங்கப்பட்ட நீதிமன்ற காவல்  முடிவடைந்தது. இதையடுத்து, குற்றவாளிகளை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணை நடத்திய நீதிபதி, வழக்கின் தன்மை, விசாரணை பணிகள் நடைபெற்று வரும் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சுர்ஜித், சரவணன், ஜெயபாலன் ஆகிய மூவருக்கும் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி வரை மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.