தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமல்படுத்தப்பட்டுள்ள மகளிர் உரிமைத் திட்டத்தில், சிலர் தவறான தகவலால் விண்ணப்பிக்க தயங்குகிறார்கள். குறிப்பாக, “வீட்டில் ஓய்வூதியதாரர் இருந்தால் ₹1,000 பெற முடியாது” என்பது தவறான புரிதல் என அரசு விளக்கமளித்துள்ளது.

புதிய விதிகள்ப்படி, ஓய்வூதியம் பெறும் பெண்மணியே இந்த திட்டத்தில் சேர முடியாது என்பதே உண்மை. ஆனால் அந்த வீட்டில் 21 வயதுக்கு மேற்பட்ட மற்றொரு பெண் இருந்தால், அவருக்கு மாதந்தோறும் ₹1,000 பெறுவதற்கான தகுதி உள்ளது. இதற்காக நவம்பர் மாதம் வரை நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் விண்ணப்பிக்குமாறு அரசு மக்களுக்குத் தெரிவித்து உள்ளது. எனவே, தகுதியுள்ளவர்கள் தவறாமல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும்.