ஒரு இன்ஸ்டாகிராம் காணொளி, குழந்தைகளுடன் இருக்கும்போது ஸ்மார்ட்போனில் மூழ்காமல் அவர்களை கவனிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இந்தக் காணொளியில், ஒரு தாய் தனது குழந்தையுடன் லிஃப்டில் இருக்கிறார். அந்தக் குழந்தை லிஃப்ட் கதவில் கையை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறது. ஆனால், தாய் இதை பொருட்படுத்தாமல் தனது செல்போனில் முழுக் கவனமாக இருக்கிறார். குழந்தையின் செயலை கவனிக்காமல் விடுவது அவருக்கு பெரிய பிரச்சனையை உருவாக்குகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Computer Geeks (@computergeeks91)

லிஃப்ட் கதவை திறக்கும் பொத்தானை அந்த தாய் அழுத்த, கதவு திறக்கும்போது குழந்தையின் கை கதவில் மாட்டிக் கொள்கிறது. இதனால், தாய் பதறிப்போய் குழந்தையின் கையை விடுவிக்க பெரும் முயற்சி செய்கிறார். இந்தக் காணொளி, குழந்தைகளுடன் இருக்கும்போது அவர்களின் செயல்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஸ்மார்ட்போனில் மூழ்குவது குழந்தைகளின் பாதுகாப்பை பாதிக்கலாம் என்பதை இந்த சம்பவம் தெளிவாக எடுத்துரைக்கிறது.