சமூக வலைதளங்களில் ஒரு அதிர்ச்சியூட்டும் காணொளி வைரலாகி வருகிறது, இன்ஸ்டாகிராமில் வெளியான இந்தக் காணொளியில், சில சிறுவர்கள் வெடிப்பொருட்களைப் பயன்படுத்தி விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது, ஒரு சிறுவனின் ஷூவில் வெடிக்காத பட்டாசு கட்டி, அதற்கு தீ வைக்கின்றனர். முதலில் அந்த சிறுவன் அமைதியாக இருந்தாலும், பின்னர் வலி தாங்க முடியாமல் அலறியபடி ஓடுவது காணொளியில் பதிவாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Sintu (@mustaqueflipper)

அவசரமாக சிறுவன் தனது ஷூவை கழற்றிப் பார்த்தபோது, அவனது காலில் ஒரு விரல் காயமடைந்திருந்தது. உடனடியாக அவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தக் காணொளி வைரலாக பகிரப்பட்டு வரும் நிலையில், ஆபத்தான விளையாட்டுகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்த்தி உள்ளது.