அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று  “ஹரித்வார் ஆன்மிக பயணத்திற்காகவே டெல்லி செல்கிறேன்; பாஜக தலைவர்களை சந்திக்க திட்டமில்லை” என்று விமான நிலையத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், டெல்லி சென்றதற்கு பின்னர் அவரது நிலைபாடு முற்றிலும் மாறி விட்டது.

தற்போது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்துள்ளார் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், அதிமுகவின் ஒன்றிணைப்பு முயற்சிகள் குறித்து முக்கியமான விவாதங்கள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், அதிமுக பக்கத்தில் மீண்டும் உள்நிலை பரபரப்பு ஏற்பட்டு உள்ளதோடு, செங்கோட்டையன் எடப்பாடிக்கு எதிராக அடுத்த கட்ட  அரசியல் நகர்வு  தொடங்கவுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முன்னதாக, கட்சி ஒருங்கிணைப்புக்காக பாஜகவிடம் ஏதேனும் முயற்சி செய்யப்படுகிறதா?, அல்லது செங்கோட்டையன் தனிப்பட்டபடியாக அணுகுகிறாரா..  என்ற சந்தேகங்கள் எழுந்திருந்த நிலையில், அவர் நேரில் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.  இது குறித்து அதிமுக தரப்பில் எந்தவிதமான பதிலும் இன்றளவும் வரவில்லை.