உக்ரைன் போரில் இருந்து தப்பி பாதுகாப்பான வாழ்க்கைக்காக அமெரிக்கா சென்ற 23 வயது இரினா ஸருட்ஸ்கா, நெஞ்சை பிளக்கும் கொடூர சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி இரவு 10 மணி முன்னதாக, சார்லட் நகரத்தின் ‘லின்க்ஸ் ப்ளூ லைன்’ மெட்ரோ ரயிலில் பயணித்த போது, ஒரு மர்ம நபரால் வழியிலேயே கத்திக்குத்தி கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியானதுடன், அதிர்ச்சியும் வேதனையும் பரவியுள்ளது.
சிசிடிவி வீடியோவின் படி, இரினா சம்பவத்தன்று இரவு 9.46 மணிக்கு தனது பீட்சா கடை பணியாளர் யூனிபார்ம் அணிந்தவாறு ரயிலில் ஏறுகிறார். பின் அமைதியாக அமர்ந்து தன் கைபேசியை பார்த்துக்கொண்டிருந்த நிலையில், 4 நிமிடங்களுக்குள் 34 வயது டிகார்லோஸ் பிரவுன் ஜூனியர் என்ற பழைய குற்றவாளி தனது மடிக்கத்தியை எடுத்துக் கொண்டு திடீரென அவரை மூன்று முறை குத்துகிறார். அதில் ஒன்று அவரின் கழுத்தில் பட்டுள்ளதாகவும், அந்தக் காயம் உயிர் சேதத்துக்குக் காரணமாகவுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடூரத் தாக்கத்திற்கு பிறகு, தாக்கிய நபர் தனது ஸ்வெட்டர் ஜாக்கெட்டை போட்டுவிட்டு ரயிலின் கதவுகளிடம் சென்று நின்றார். அதற்குள் பயணிகள் அவர் கை மற்றும் உடலில் இருந்து ரத்தம் வடிகின்றதை கவனித்து பதறத் தொடங்கினர். இரினா கழுத்தை பிடித்தபடி ரத்தம் கொட்டிய படி தனது இருக்கையில் சரிந்து விழ, சம்பவ இடத்தில் மரணம் அடைந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் சார்லட் நகரில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
