தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், விரைவில் முழுநேர அரசியலில் களமிறங்கவிருப்பவருமான விஜய், தற்போது தனது கடைசி திரைப்படமான ஜனநாயகன் படப்பிடிப்பை முடித்துள்ளார்.

அவரது மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா ஆகியோர் லண்டனில் வசித்து வருவதாக இதற்கு முன் செய்திகள் வெளியான நிலையில், தற்போது சங்கீதா மற்றும் ஜேசன் சஞ்சயின் சமீபத்திய புகைப்படம் வைரலாகியுள்ளது. விமான நிலையத்தில் எடுத்ததாகக் கூறப்படும் அந்த புகைப்படத்தில், சங்கீதா கையில் குவளை பிடித்து யாருடனோ பேசிக்கொண்டு முன்னே செல்வதும், அவரை பின்தொடர்ந்து ஜேசன் சஞ்சய் நடந்து செல்வதும் பதிவாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், “சங்கீதா-ஜேசன் தற்போது சென்னையில் இருக்கிறார்கள்” என்று கூறுகின்றனர். சிலர், விஜய் அரசியல் சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க உள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக சங்கீதா சென்னை வந்திருக்கலாம் எனக் கூறுகின்றனர்.

“>

 

ஆனால், இது சென்னை விமான நிலையமா அல்லது கோவா விமான நிலையமா என்ற கேள்வி எழுந்துள்ளதால், உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை. இதனால், விஜயின் குடும்பம் தற்போது எங்கு உள்ளனர் என்பது குறித்து ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், ஜேசன் சஞ்சய் தனது முதல் இயக்குநர் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் இந்த படம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெளிநாட்டில் திரைப்படம் தொடர்பான பயிற்சி பெற்ற ஜேசன் சஞ்சய், தற்போது தமிழில் தனது திறமையை வெளிப்படுத்தி வருவது சிறப்பாகக் கருதப்படுகிறது.

மறுபுறம், சங்கீதா தனது தொழிலை கவனித்து லண்டனில் தங்கியிருப்பதாகவும், இளைய மகள் திவ்யா சாஷாவும் அவருடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், விஜய் குடும்பம் தொடர்பான செய்திகள் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.