நேபாள அரசு சமூக ஊடகங்களை பொறுப்புடன் செயல்படச் செய்யும் நோக்கத்தில் ஒரு புதிய சட்டத்தை சமீபத்தில் கொண்டு வந்துள்ளது. இதன்படி, அந்த நாட்டில் இயங்கும் அனைத்து சோஷியல் மீடியா செயலிகளும் அரசு பதிவு பெற வேண்டும் என்ற கட்டாய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சட்டத்தின் அடிப்படையில், அரசு நோட்டீஸ் அனுப்பிய பிறகும் குறிப்பிட்ட காலக்கெடுவில் பதிவு செய்யத் தவறிய 26 செயலிகளுக்கு தற்போது நேரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் Facebook, Instagram, YouTube, X -தளம்  உள்ளிட்ட பிரபலமான செயலிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், TikTok செயலி சரியான முறையில் பதிவு செய்துள்ளதால், அதற்கு எந்தவிதமான தடையும் விதிக்கப்படவில்லை என அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த முடிவால் நேபாள மக்களிடையே சலசலப்பும், பரபரப்பும் நிலவுகிறது.