இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 80வது ஆண்டைக் குறிக்கும் வகையில் சீனாவின் பெய்ஜிங்கில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சீன அதிபர் ஜின்பிங் உடன் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோர் முன்னிருந்தது பெரும் கவன ஈர்ப்பை பெற்றது. மூன்று நாடுகளும் ஒரே மேடையில் தோன்றியதால், அமெரிக்கா வட்டாரங்களில் நெருக்கடியான Rajangam நிலை காணப்பட்டது.
இந்த நிலையில், “சீனா, ரஷ்யா, வடகொரியா மூவரும் சேர்ந்து அமெரிக்காவிற்கு எதிராக சதி செய்கின்றனர்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரடியாக குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து, அமெரிக்க பாதுகாப்புத் துறை பென்டகனுக்கு, ராணுவ தயார்நிலையை உயர்த்தும் உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவுகள் குறித்து பென்டகன் தலைவர் பீட் ஹெக்செத் ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், “இது போரைத் தொடங்குவதற்காக அல்ல, வீரர்களின் தடுப்பு திறனை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகும்” என்று விளக்கியுள்ளார்.
மேலும், “முந்தைய நிர்வாகம் எடுத்த பலவீனமான முடிவுகளால் சீனாவும் ரஷ்யாவும் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டன. இது அமெரிக்க தலைமையின் ஒப்பில்லாமையின் விளைவாகும். அதனால்தான் அதிபர் டிரம்ப் திடமாக ராணுவத்தை மறுசீரமைப்பதற்கும், எதிரிகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்” எனவும் ஹெக்செத் கூறியுள்ளார்.
