ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக நிலநடுக்கம் தொடர்ந்து பதிவாகி வருவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நேற்று (செப்.4) நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை, ஒரே இரவில் மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதல் நிலநடுக்கம் இரவு 10:26 மணியளவில் 5.8 ரிக்டர் அளவில் பதிவாக, பிறகு 11:45 மணிக்கு 4.1 ரிக்டர், மேலும் அதிகாலை 3:16 மணிக்கு 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கங்களில் சிக்கி ஏற்கனவே 2,200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. சிக்கியவர்களை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மிகுந்த பயத்துடன் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிக்கு மாற்றும் நடவடிக்கையும் இடம்பெற்று வருகிறது. தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால், பொதுமக்கள் மிகுந்த பதற்றத்துடன் இருக்கின்றனர்.