துருக்கியைச் சேர்ந்த தொழில்நுட்ப செய்தி நிறுவனமான ShiftDelete-இன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஹக்கி அல்கான், தனது ஊழியர் சாமெட் ஜான்கோவிக் மீது கோபத்தில் அலங்கார பூந்தொட்டி ஒன்றை வீசி தாக்கிய அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உள்ளடக்கம் வெளியிடுவது குறித்து இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம், அல்கானின் கோபத்தால் வன்முறையாக மாறியது. ஜான்கோவிக்கின் தலையில் தாக்கி, அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜான்கோவிக், அல்கானை எதிர்த்து மோத முயன்றார், ஆனால் மற்ற ஊழியர்கள் தலையிட்டு இருவரையும் பிரித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Teknoloji videolarıyla tanınan Hakkı Alkan ile çalışanı Samet Jankovic arasında yaşanan olayın görüntüsü paylaşıldı.
Jankovic çakıl taşlı saksının kendisine fırlatıldığını belirterek Alkan hakkında şikayetçi oldu.
Hakkı Alkan da fırlattığı cismin çiçek dalı olduğunu, yaşanan… pic.twitter.com/TFhnZjCr1j
— ibrahim Haskoloğlu (@haskologlu) August 30, 2025
இதையடுத்து, ஜான்கோவிக் மருத்துவ அறிக்கை பெற்று, அல்கான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார். சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டதில், “நான்கு ஆண்டுகளாக சகோதரர் என அழைத்தவர், மற்றவர்கள் முன்னிலையில் தாக்கியது இயல்பாகவே விளைவுகளை ஏற்படுத்தும். கூடுதல் நேரம் பணியாற்றியதற்கு ஊதியம் வழங்கப்படவில்லை; சமீபத்திய ஊதிய உயர்வும் ரத்து செய்யப்பட்டது” எனக் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, அல்கான் பகிரங்க மன்னிப்பு கோரி, சம்பவத்தின் CCTV காட்சிகளை விசாரணைக்கு வழங்கியுள்ளார். “24 மணி நேர பதிப்பு வேலை மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. வாக்குவாதத்தின்போது கட்டுப்பாட்டை இழந்து, நான் வைத்திருந்த பூந்தொட்டியை வீசினேன், அது தவறுதலாக ஜான்கோவிக்கை தாக்கியது. அதிர்ஷ்டவசமாக, அவருக்கு காயம் இல்லை. என் செயலுக்கு வருந்துகிறேன்; அமைதியான பணிச்சூழலை உறுதி செய்வேன்” என அல்கான் தெரிவித்தார்.
