இன்றைய சமூக ஊடகங்களை ஆட்சி செய்கின்றது ரீல்ஸ் கலாச்சாரம். ஒவ்வொருவரும் தனக்கு வைரல் ஆகவேண்டும் என்பதற்காக பெயர், புகழ், லைக்ஸ் இவற்றுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கின்றனர். அப்படித்தான் ஒரு பெண், மண்ணால் ஆன மிக உயரமான பாறையின் மீது நின்று ரீல்ஸ் எடுக்க ஆரம்பித்தார்.

 

சில நொடிகளுக்கு பின், எதிர்பார்த்ததே நடந்தது. மண் தகர்ந்தது, சமநிலை இழந்த பெண் கீழே விழுந்தார். வீடியோவில் மிக நையாண்டி மாதிரி விழும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக, விழும் போது அவர் சிரிக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள், “இதெல்லாம் act-போலதான் இருக்கு… திட்டமிட்டு வைரல் ஆகச் செய்திருப்பார் போல!” என சந்தேகிக்கின்றனர்.