திருமணநாள் என்றாலே சந்தோஷமும், சிரிப்பும் கலந்த விழா. ஆனா, சில நேரம் மணமக்கள் செய்யும் கலாட்டா காட்சி நம்மை ஆச்சரியப்பட வைக்கும். இணையத்தில் இப்போது வைரலாகும் ஒரு வீடியோவில், மாப்பிள்ளை கல்யாண மேடையில் மணமகளுக்கு லட்டு கொடுக்க முயற்சிக்கிறார். ஆனா, மணமகள் முகம் சுளிக்கிறார். முதலில் முகத்தை திருப்புறாங்க… பின்பு அவர் மீண்டும் மீண்டும் லட்டு கொடுக்க முயற்சித்தாலும், அதை மணமகள் வாங்கவில்லை.

 

சில நிமிடத்துக்குப் பிறகு, மணமகள் லட்டு வாங்குற மாதிரி பண்ணி, அதையே மேடையிலிருந்து கீழே வீசிவிட்டார். ஆனா மாப்பிள்ளை இதுக்கு முன்னரே ப்ளான் பண்ணி வைத்திருந்த மாதிரி, மணமகள் கொடுத்த லட்டுவை அவர் வாயில் வைத்திருந்தார். அதையும் உடனே எடுத்து கீழே வீசி விட்டார். இந்த ஒரு காமெடி சீன் பார்ப்பவர்களை சிரிக்க வைக்கும் வகையிலான ட்விஸ்ட் ஆக மாறியது!

இந்த வீடியோவை @sillyshweta என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் பார்த்து, விதவிதமான கமெண்டுகளுடன் கலாட்டா செய்து வருகின்றனர்.