கேரளாவின் திருவனந்தபுரம் அருகே ஏற்பட்ட குடும்ப சச்சரவால் 65 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
35 வயது நிஷாத் ஏதோ ஒரு குடும்ப பிரச்சனை தொடர்பாக தனது மனைவி மற்றும் வயதான தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தபோது தந்தை ரவீந்திரன் தடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது கோபம் அடைந்த நிஷாத், தனது தந்தையை வேகமாக தள்ளிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தள்ளப்பட்ட ரவீந்திரன் தரையில் விழுந்துவிட்டார். இதையடுத்து அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்து சென்றனர். ஆனால், இதற்குள் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். குறிப்பாக, ரவீந்திரனுக்கு இதய நோய் இருந்ததால், திடீரென விழுந்ததால் அவர் மரணமடைந்திருக்கலாம் என பரிசோதனையிலிருந்து தெரிய வந்துள்ளது.
சம்பவம் குறித்து விசாரித்த போலீசார், அவரது மகன் நிஷாத் மீது குடும்ப தகராறு மற்றும் அக்கறையற்ற கொலை குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்துள்ளனர்.
