இணையதளத்தில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் தெரு கடைக்காரர் ஒருவர் முட்டை புரோட்டாவை வித்தியாசமான முறையில் தயார் செய்கிறார். அதாவது முதலில் சூடான பாத்திரத்தில் அவர் மான்ஸ்டர் குளிர்பானத்தை ஊற்றுகிறார். அதன் பின் அதில் 4 முட்டைகள், உப்பு, வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறுகிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by STREET FOOD JOURNEY (@streetfoodjourn3y)

இதையடுத்து சாக்லேட் துண்டுகளை போடுகிறார். அதன் பின் ஒரு தக்காளியை வெட்டி போடுகிறார். அதன் பின் மீண்டும் இதனை நன்கு கிளறுகிறார். இறுதியில் அதனை எடுத்து அவர் பரிமாறுகிறார். இதன் விலை ரூ.250 என்று கூறுகிறார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.