உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணின் உடல் அரை நிர்வாண கோலத்தில் வயல்வெளியில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் காதல் விவகாரத்தில் இது நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்த பெண்ணின் காதலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் அவரை வலை வீசி தேடி வருகிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வயலுக்கு நீர் பாய்ச்ச சென்றபோது அந்த பெண்ணின் சடலத்தை பார்த்த ஒருவர் குடும்பத்தினருக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். அந்தப் பெண் அணிந்திருந்த சல்வார் அவரது கழுத்தை சுற்றி இருந்ததால் அந்த துப்பட்டாவால் அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் காதலன் பிடிப்பட்டால் உண்மை தெரியவரும் என்று கூறப்படுகிறது.
