“ஸ்டார் பிளேயர்கள் இருக்குற இந்திய டீமை வச்சுக்கிட்டு, அயர்லாந்து போன்ற டீம்கிட்ட இப்படி பேக் டூ பேக் தோத்து ஹிஸ்டரி கிரியேட் பண்றதுக்கு உண்மையிலேயே ஒரு அசாத்தியமான திறமை வேணும், அதனால கௌதம் காம்பீரை எங்க டீம் கோச்சாக நியமிக்கிற திட்டம் எங்ககிட்ட சுத்தமா இல்லவே இல்லை!”
-என்று அயர்லாந்திடம் இந்திய அணி 0-2 என டி20 தொடரை இழந்த அசிங்கமான தோல்வியைக் கிண்டல் செய்யும் விதமாக ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் தங்களது எக்ஸ் சோசியல் மீடியா பக்கத்தில் மூர்க்கத்தனமாகப் பதிவிட்டு இந்திய அணியின் காயத்தில் உப்பைத் தடவியுள்ளது உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி, நேற்று இரண்டாவது டி20 போட்டியிலும் ஒரு ரன் வித்தியாசத்தில் பரிதாபமாகத் தோற்றுத் தொடரை அடியோடு பறிகொடுத்துள்ளது.
We can confirm that we don’t wish to add Gautam Gambhir to our coaching staff. He clearly has talent, though. To take those Indian players and deliver those results in Ireland takes truly remarkable gifts.
— Iceland Cricket (@icelandcricket) June 28, 2026
“>
கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் உலகக் கோப்பை நாயகன் சஞ்சு சாம்சன் உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் தொடர் முழுவதும் மோசமாகச் சொதப்பியதால் இந்திய தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீரை நெட்டிசன்கள் இணையத்தில் வறுத்தெடுத்து வரும் நிலையில், அடுத்ததாக ஜூலை 1 ஆம் தேதி தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலாவது இந்திய அணி மீண்டு வருமா என்ற விவாதம் கிளம்பியுள்ளது.
